கம்பம் வேலப்பர்கோவில் தெருவில் நடுரோட்டில் வாகனங்கள் பார்க்கிங்-கடும் போக்குவரத்து நெரிசல்
2022-07-12@ 12:46:51

கம்பம் : கம்பத்தில் சாலையில் வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். கம்பத்தின் இதய பகுதியான சிக்னல், அரசமரம், வேலப்பர் கோவில் தெருவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். வேலப்பர் கோவில் தெருவில் மருத்துவமனைகள், நகைக்கடைகள், பலசரக்கு கடைகள் அதிகம் உள்ளன. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். ஆனால் இப்பகுதியில் காலை நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சரக்கு லாரியை நடு ரோட்டில் நிறுத்தி சரக்கு இறக்குவதால், பின்னால் வானக ஓட்டிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
மேலும் வேலப்பர் கோவில் தெருவில் உள்ள ரோட்டை பாதிக்கு மேல் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மிச்சம் இருக்கக்கூடிய ரோடுகளில் சரக்கு வாகனமும், ஆட்டோக்களும் வழி மறித்து நடு ரோட்டில் நிற்கின்றன. இதனால் அவசர வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!