திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை: 6 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
2022-07-10@ 00:06:03

குலசேகரம்: கும்பாபிஷேகம் நடைபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேற்று காலை தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து மாலையில் கொடியேற்றத்துடன் 6 நாள் திருவிழா தொடங்கியது.குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று (9ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு சிறப்பு பூஜை, 72 அடி உயர தங்க கொடிமர பிரதிஷ்டை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்ச பூஜை, அபிஷேகம், அன்னதானம் நடந்தது.
கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து 6 நாள் திருவிழா ேநற்று முதல் தொடங்கியது. இதற்காக நேற்று மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்தில் கருடன் உருவம் பதிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அதனைதொடர்ந்து லட்ச தீபம் ஏற்றப்பட்டது. வருகிற 14ம் தேதி வரை பூஜைகள், காலை மற்றும் மாலையில் ஸ்ரீபூதபலி எழுந்தருளல் என திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!