ரூ.3.5 கோடி பயிர்க்கடன் மோசடி மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வாளர் சஸ்பெண்ட்
2022-07-08@ 01:18:12

சேலம்: பயிர்க்கடன் மோசடி விவகாரம் தொடர்பாக மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் இடைப்பாடியில் வெள்ளிரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இச்சங்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.3.5 கோடி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வாளர் வெங்கடேசுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆய்வாளர் வெங்கடேசை சஸ்பெண்ட் செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மோசடி புகாரில் சங்க செயலாளர் மோகன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்
அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மண்எண்ணெய் ஊற்றி மனைவி எரித்து கொலை கணவனுக்கு ஆயுள் சிறை
கத்திமுனையில் மிரட்டி ஓட்டல் ஊழியரிடம் வழிப்பறி
நகை திருடிய வேலைக்கார பெண் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!