SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு: கேரள மாஜி அமைச்சர் மீது வழக்கு

2022-07-07@ 21:41:06

திருவனந்தபுரம்: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியதாக கேரள மாஜி அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசில் கலாச்சாரம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியான். செங்கணூர் தொகுதி எம்எல்ஏவான இவர்,  சில தினங்களுக்கு முன் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அமைச்சர் சஜி செரியான் பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து அமைச்சர் சஜி செரியான் நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய சஜி செரியான் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடக்கோரி கொச்சியை சேர்ந்த பைஜு நோயல் என்பவர் திருவல்லா முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.

இதை பரிசீலித்த நீதிமன்றம், சஜி செரியான் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கீழ்வாய்ப்பூர் போலீசார் அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்