SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளாத்திகுளத்தில் ஒரே நேரத்தில் 2 கன்றுகுட்டி ஈன்ற பசு

2022-07-07@ 21:25:47

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில்  பசு, ஒரே நேரத்தில் இரண்டு  பெண் கன்றுகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். விளாத்திகுளம்- வேம்பார் ரோடு நேதாஜி நகரை சேர்ந்த மகாராஜன்(42), பஞ்சவர்ணம்(35) தம்பதியினர் விவசாய பணி மற்றும் வீட்டில் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.  

இவர்களது வீட்டில்  உள்ள 4 மாடுகளில் பசு ஒன்று கன்று ஈன்றும் சினை பருவத்தில் இருந்தது. இந்நிலையில் சினைப்பசு, நேற்று ஒரேநேரத்தில் அடுத்தடுத்து 2 பெண் கன்றுகளை ஈன்றுள்ளது. வழக்கமாக ஒரு கன்றுதான் ஈன்றுவது வழக்கம்.

ஆனால் தற்போது ஒரேநேரத்தில் 2 பெண் கன்றுகளை ஈன்றுள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து  தகவல் அறிந்த அப்பகுதிமக்கள், பசு மற்றும் பெண் கன்றுகளை வியப்புடன் பார்த்து சென்றனர்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்