SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி

2022-07-07@ 20:58:10

பெங்களூரு: கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டம் பண்டுவால் பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த 3 பேர், உத்தர கனடாவை சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 5 பேர் குடிசை அமைத்து தங்கி, அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு, அவர்கள் தங்கியிருந்த வீடு மண்ணுக்குள் புதைந்தது.

இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்திருந்த ஜானி (44) என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மற்ற 3 பேரான பிஜு (45), சந்தோஷ் (46), பாபு (46) ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பண்டுவால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழை காரணமாக மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்