SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாக்டரை கரம் பிடித்தார்; பஞ்சாப் முதல்வர் திருமணம் எளிமையாக நடந்தது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு

2022-07-07@ 20:52:52

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் திருமணம் இன்று எளிமையாக நடந்தது. டாக்டர் பெண்ணை கரம்பிடித்துள்ளார். மணமக்களுக்கு டெல்லி முதல்வர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நகைச்சுவையாளர், பாடகர், நடிகர், சமூக சேவகர், அரசியல் பிரமுகர் என பன்முக திறமை படைத்தவர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். கடந்த மார்ச் மாதம் நடந்த பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக 48 வயது நிரம்பிய பகவந்த் மான் பொறுப்பேற்றார். அன்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான், இன்று 2வது திருமணம் செய்து கொண்டார். டாக்டரான குர்ப்ரீத் கவுர் என்பவரை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் சண்டிகரில் உள்ள பகவந்த் மானின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடந்தது. விழாவில், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘மான், இன்று ஒரு புதிய பயணத்தை தொடங்குகிறார். அவருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

ேமலும் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா கூறுகையில், ‘என் தாயுடன் இங்கு வந்துள்ளேன். மான் மற்றும் அவரது குடும்பத்தினரை வாழ்த்துகிறேன்’ என்றார்.
இந்த விழாவில், சில தலைவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு இந்திய மற்றும் இத்தாலிய வகை உணவுகள் பரிமாறப்பட்டது. பகவந்த் மான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது தாயின் விருப்பமாக இருந்தது. அவரும், பகவந்த் மானின் சகோதரியும்தான் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகவந்த் மான் தனது முதல் மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தார். பகவந்த் மான் மற்றும் அவரது முதல் மனைவிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். விவாகரத்துக்கு பிறகு பகவந்த் மானின் முதல் மனைவி தனது 2 குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். மகன், மகள் ஆகியோர் பகவந்த் மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்