மாணவியை கடத்தி வாலிபருக்கு திருமணம்; 2 பெண்கள் கைது!
2022-07-07@ 18:07:53

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது பெண். குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அக்கம்பக்கம், உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் குடியாத்தம் அடுத்த வரதரெட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்த வில்வநாதன் மனைவி சுமதி(51), குடியாத்தம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த லோகநாதன் மனைவி டில்லி(45) ஆகியோர் மாணவியை கடத்திச்சென்று வாலிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பெண்களையும் நேற்று கைது செய்து குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!