லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது!
2022-07-07@ 18:02:19

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதி ஜம்னாமரத்தூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35), கட்டிட தொழிலாளி. இவர் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலுக்கு உதவி செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக ஜம்னாமரத்தூர் தனிப்பிரிவு ஏட்டு விஜய்(37) மிரட்டியுள்ளார். அதற்கு கோவிந்தராஜ், செம்மர கடத்தல் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்டிட மேஸ்திரி வேலை செய்துதான் பிழைத்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆனாலும் விஜய், தனிப்பிரிவில் பணிபுரிவதால் தான் கொடுக்கும் தகவலின்பேரில், உன் மீது வழக்கு போடுவார்கள் என சொல்லி ரூ. 15 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்நிலையில் தனிப்பிரிவு ஏட்டு விஜய், ஜம்னாமரத்தூரில் இருந்து திருவண்ணாமலை அடுத்த வானாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சில நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். பணி மாறுதலில் வந்த பிறகும், கோவிந்தராஜியிடம் பணத்துடன் வானாபுரத்துக்கு வருமாறு தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் கோவிந்தராஜ் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி நேற்று மாலை வானாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கோவிந்தராஜ், அங்கிருந்த ஏட்டு விஜயிடம் ரூ. 15 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் விஜய்யை கையும் களவுமாக பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:
லஞ்சம் ஏட்டு கைது!மேலும் செய்திகள்
லாரி டிரைவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்த 4,100 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை காவலாளி கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை: நண்பர்கள் 4 பேருக்கு வலை
இறந்த கணவர் மீண்டும் வருவார் என கூறி பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் மோசடி; போலி மந்திரவாதிக்கு வலை: பலரை உயிர்ப்பித்து தந்ததாக கூறி நாடகம்
போலீசுக்கு தெரியாமல் கஞ்சா வாங்கும் இடத்தை சொல்லுங்க...: யூடியூப் மூலம் மாணவிக்கு தகவல் கொடுத்தவர் கைது
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!