ஜாமீன் தர நீதிபதி நிபந்தனை குழந்தை பெற்ற காதலிக்கு தாலி கட்டிய காதலன்
2022-07-07@ 18:00:42

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடுகப்பட்டியை சேர்ந்த பாலு மகன் அஜித்(23). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் சத்யா(20) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சத்யாவுடன் பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளார். இதில் சத்யா கர்ப்பமாகி கடந்த மே மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதே அஜித் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இதுகுறித்து சத்யா கீரனூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார்.
அதன்பேரில் அஜித்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக சிறையில் இருந்த அஜித் தனக்கு ஜாமீன் வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இரண்டு முறை ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிபதி நேற்று, மீண்டும் ஜாமீனுக்கு அவர் மனு தாக்கல் செய்தபோது ஏமாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு கைக்குழந்தையையும் ஏற்றுக் கொண்டால் ஜாமீன் தருவதாக தெரிவித்தார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த அஜித், புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் நீதிபதி அனுப்பி வைத்த வழக்கறிஞர்கள் மற்றும் சத்யாவின் குடும்பத்தினர் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் அவர் குழந்தை, காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
மேலும் செய்திகள்
ஈரோடு கருமுட்டை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!