சென்னையில் கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி கைது: போலீசார் விசாரணை
2022-07-07@ 17:00:07

சென்னை: சென்னை வளசரவாக்கம் வஉசி நகரை சேர்ந்த குமார்(50) எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(40) வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், அவர்கள் இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
குமார் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3-ம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக அவரது மனைவி விஜயா வளசரவாக்கம் போலீசாருக்கு சோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. குமார் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று குடிபோதையில் வந்த குமார் தகராறு செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதில் குமார் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசில் சிக்காமல் இருக்க கணவர் குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியதாக கூறியுள்ளார்.
விஜயாவின் செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் வேறு ஒரு நபருடன் அவர் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளது. அதனால் ஏற்பட்ட தகராறில் கணவரை கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கணவரை விஜயா மட்டுமே கொலை செய்தாரா அல்லது விஜயாவுடன் தொலைபேசியில் பேசிய நபருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து குமார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி விஜயாவை போலீசார் கைது செய்தனர். மனைவியே கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
லாரி டிரைவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்த 4,100 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை காவலாளி கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை: நண்பர்கள் 4 பேருக்கு வலை
இறந்த கணவர் மீண்டும் வருவார் என கூறி பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் மோசடி; போலி மந்திரவாதிக்கு வலை: பலரை உயிர்ப்பித்து தந்ததாக கூறி நாடகம்
போலீசுக்கு தெரியாமல் கஞ்சா வாங்கும் இடத்தை சொல்லுங்க...: யூடியூப் மூலம் மாணவிக்கு தகவல் கொடுத்தவர் கைது
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!