போரூர் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
2022-07-07@ 16:53:04

பூந்தமல்லி: சென்னை போரூர், மங்களா நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இக்கோவிலை சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து முடிந்தன. இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின.
இதைத் தொடர்ந்து யாக பூஜைகள், அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகளுடன் வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை 6ம் கால யாகபூஜைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, 5 கலசங்கள் கொண்ட ராஜகோபுரம், மூலவர் விமானம், பிரகார சன்னதிகளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர், உற்சவர் மற்றும் பிரகார சன்னதிகளில் எழுந்தருளியுள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்எம்டி.டீகாராமன், மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, 153வது வட்ட மாமன்ற உறுப்பினர் சாந்தி ராமலிங்கம், கும்பாபிஷேக விழாக் குழு தலைவர் ஜி.நடராஜன், ஆலோசகர் பி.குமரேசன், கோயில் நிர்வாக தலைவர் துரை.பத்மநாபன், செயலாளர் பி.குருசாமி, நிர்வாகிகள் கே.பி.முருகன், ஆர்.பாபு, ஜெ.தேவராஜன், ஆர்.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பைக் மீது அரசு பஸ் மோதி 2 ஐடி ஊழியர்கள் படுகாயம்
சென்னை ஓ.எம்.ஆரில் காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் மையம்: நடிகர் விக்ரம் துவக்கி வைப்பு
வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை 6 முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு: செல்போன் சிக்னல் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை
கோயில் திருவிழாவில் தாக்கியதால் முன்விரோதம் சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாளில் ரவுடி வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நந்தனம் கல்லூரியில் 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா: ஜெகத் கஸ்பர் பேட்டி
தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம் : ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!