புதுச்சேரி அருகே கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
2022-07-07@ 15:47:44

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மனைவி, மகள், மகனை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தினரை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஆட்டோ ஒட்டுநர் தியாகராஜன், அவரது மனைவி செல்வி, மகள் மற்றும் மகன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜனுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு முதல் காலை வரை ஆட்டோ ஒட்டுநரின் குடும்பத்தினர் யாரும் வெளியே வரததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் கடன் தொல்லை காரணமாக மனைவி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!