தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
2022-07-07@ 14:46:29

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இன்றும், நாளையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவித்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக்வ் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள சமையல் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து...
பைக் மீது அரசு பஸ் மோதி 2 ஐடி ஊழியர்கள் படுகாயம்
சென்னை ஓ.எம்.ஆரில் காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் மையம்: நடிகர் விக்ரம் துவக்கி வைப்பு
வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை 6 முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு: செல்போன் சிக்னல் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை
கோயில் திருவிழாவில் தாக்கியதால் முன்விரோதம் சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாளில் ரவுடி வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நந்தனம் கல்லூரியில் 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா: ஜெகத் கஸ்பர் பேட்டி
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!