SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

2022-07-07@ 01:24:38

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதால் 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழுவை கூட்ட 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் நோட்டீஸ் வந்தது. இந்த விஷயத்தில் கட்சியின் விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஸ்ரீராம், சி.திருமாறன், ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகினர். குரு கிருஷ்ணகுமார் வாதிடும்போது, ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு தடை தான் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை (இன்று) தாக்கல் செய்கிறோம். விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார். அதற்கு, நீதிபதி, இந்த வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று நீதிமன்றத்தை நிர்ப்பந்திக்க முடியாது  என்று கருத்து தெரிவித்தார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர், கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். அதற்கு அவகாசம் வேண்டும் என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்யுங்கள். விசாரணை நாளை (இன்று) பிற்பகல் 2.15க்கு நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்