SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை மைய கட்டிடம்

2022-07-07@ 01:16:00

செய்யூர்: செய்யூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், ரூ.38 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது. இங்கு, மானிய விலையில் விவசாயி பொருட்கள் வழங்கப்படஉள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.38 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் சந்தானம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு  மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம்,   கவுன்சிலர் மோகனா கோபிநாத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   திறக்கப்பட்ட இந்த துணை வேளாண்மை மைய அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு வகையான இடுப்பொருட்கள்,  விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்படும்.  வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, விதை சான்று மற்றும் அங்கீகார சான்றளிப்பு துறை, வேளாண்மை விற்பனை துறை, வேளாண் பொறியியல் துறை  அதிகாரிகள், இந்த அலுவலகத்திற்கு வரும் விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கப்படும். எனவே, இந்த அலுவலகத்தில் விவசாய பொதுமக்கள் வந்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்