SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டாக பிரிப்பது பற்றி பேசி வாங்கிக் கட்டிக்கொண்ட எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-07-07@ 00:27:37

‘‘அல்வா மாவட்ட எம்எல்ஏ பேச்சு அல்வா கொடுப்பது போலவே இருப்பதாக அந்த மாவட்டத்துக்காரங்க பேசிக்கிறாங்களாமே, உண்மையா...’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
 ‘‘அல்வா நகரத்தின் தாமரை கட்சி எம்எல்ஏ, பொது மேடையில் இருந்து ேபசிக் கொண்டு இருக்கிறோமே என்பதை மறந்து வாயில் வந்ததை எல்லாம் உளறியதாக பலர் நினைக்கிறாங்க. அது தான் இல்லை. தன் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் முதல்வராக ஒரு நாளாவது அந்த சீட்டில் உட்கார்ந்து இருக்காங்க. ஆனால், நாம தாமரை கட்சியில் இருந்தாலும் முதல்வர் சீட்டில் உட்கார முடியாது. தெற்கு சைடில் போட்டி இல்லை என்பதால் மாநிலத்தை 2 ஆக பிரித்தால் நமக்கு தான் சாய்ஸ் உள்ளதாக அவரே நினைத்து பேசி உள்ளாதாக தொண்டர்கள் நினைக்கிறாங்க. அதாவது, யாரோ எழுதி கொடுத்த வசனத்தை தன் வசனமாக பேசி, கட்சி தொண்டர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாராம். அவரது பேச்சை கேட்ட தேசிய கட்சியினர் உற்சாகமடைந்து வரவேற்றனராம். இதில் குளிர்ந்து போன அவர் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்றெல்லாம் அடுத்தடுத்து பேசி கட்சியினரை சூடேற்றினாராம். இதே அல்வா நகரத்துக்கு வந்த அவரது கட்சியின் ஒன்றிய இணை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த எம்எல்ஏவை அருகில் வைத்துக் கொண்டே இந்த கருத்தை நிராகரித்து விட்டாராம். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ, ஒன்றியத்துக்கு ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் முதல்வராக இருக்கணும்னு கணவுபோல.. அதனால தான் நான் சொன்னதை நிராகரித்துவிட்டார் என்று தன் அடிபொடிகளிடம் புலம்பினாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘வைத்தியானவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சேலம்காரர் பற்றி சொல்லேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘டெல்டாவில்  நெற்களஞ்சிய மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் வைத்தியானவரின் செல்வாக்கை  உடைக்க பல்வேறு முயற்சிகளை சேலத்துக்காரர் டீம் ரகசியமாக மேற்கொண்டு  வருகிறதாம். அந்த வகையில், வைத்தியானவரின் நிழல் என்று சொல்லப்பட்டு வந்த  மூன்று எழுத்து பெயரை கொண்டவர் திடீரென சேலத்துக்காரருக்கு ஆதரவு  தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியானவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும்  அதிர்ச்சியில் உள்ளார்களாம். டெல்டாவில், வைத்தியானவரின்  செல்வாக்கை உடைக்கும் வகையில் முதலில் சேலத்துக்காரருக்கு ஆதரவு  தெரிவித்துள்ள நபருக்கு இலை கட்சியில் மிக முக்கிய பொறுப்பு வழங்க  சேலத்துக்காரர் டீம் திட்டமிட்டுள்ளதாம். தற்போது அதற்கான வேலை நடந்து வருகிறதாம். விரைவில், முக்கிய பொறுப்பு அவருக்கு  கிடைக்குமாம் என நெற்களஞ்சிய மாவட்ட இலைகட்சிக்குள்ளே இந்த டாப்பிக் தான்  அரசல் புரசலாக ஓடுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘சிவமான கங்கை மாவட்டத்தில் சேலத்துக்கு எதிராக ஒன்று சேரும் தேனி டீம் பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்னை ஏற்பட்டு தேனிக்காரர், சேலத்துக்காரர் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் எந்தெந்த பகுதி தங்களுக்கு ஆதரவாக உள்ளது என பலத்தை காட்டி வருகின்றனர். வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் முக்கிய தலைமை பதவியில் உள்ள முருகன் கடவுள் பெயர் கொண்டவர், சேலத்துக்காரருக்கு ஆதரவானவர் என கூறப்படும் நிலையில், அவரால் ஓரங்கட்டப்பட்டவர்கள், அவரை பிடிக்காதவர்கள் என தனி டீமாக சேர்ந்து மாவட்ட முக்கிய தலைமை பதவியில் உள்ளவரை எதிர்க்க வசதியாக தேனிக்காரர் பக்கம் சாய்ந்துள்ளனர். இதற்கு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரானவர், எதிர்ப்பாளர்களிடம் பேசி தேனிக்காரர் பக்கம் இழுக்கும் பணியை செய்து வருகிறார். எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனவும், தேனிக்காரர் கை ஓங்கியவுடன் மாவட்டத்தை 2 ஆக பிரித்து மாவட்ட செயலாளர் பதவி பெற்றுத் தருவேன் எனவும் உறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேனிக்காரரின் ஆதரவாளர்கள் குஷியடைந்து சேலத்தை கண்டித்து போராட்டமும் நடத்தி வருகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ கெத்து காட்டி உலா வந்த உதவி காவல் ஆய்வாளரை தூக்கியடித்த கமிஷனர் பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.‘
‘‘கோவை  குனியமுத்தூர் காவல்நிலையத்தில் ஆறு எழுத்து பெயர் கொண்ட ஒரு  சப்-இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வருகிறார். இவர் இலைக்கட்சி விசுவாசியாம்.  இலைக்கட்சி பிரமுகர்கள் மீது யாரேனும் புகார் மனு கொடுக்க வந்தால், அதை  வாங்க மாட்டாராம். அத்துடன், சம்பந்தப்பட்ட நபருக்கு தகவலை  பரப்பிவிடுவாராம். இதன் மூலம் கரன்சி முதல் தங்கம் வரை பரிசு ெபாருட்களை  பெறுவாராம். இந்நிலையில், கோவைப்புதூரை சேர்ந்த மாநகராட்சி இலைக்கட்சி  கட்சி கவுன்சிலர் ஒருவர், அடிதடி விவகாரத்தில் சிக்கினாராம். பாதிக்கப்பட்ட  நபர், புகார் மனு கொடுக்க குனியமுத்தூர் காவல் நிலையம் சென்றபோது அவரை  படாதபாடுபடுத்தினாராம். இந்த விவகாரத்தை இலைக்கட்சி கவுன்சிலருக்கும்  தெரிவித்துவிட்டாராம். உடனே அவர், எஸ்ஐ போலவே கெத்து காட்ட ஆரம்பித்து  விட்டார். ‘பார்த்தியா... ஸ்டேனுல முழுசா நம்ம ஆளுங்கதான் இருக்காங்க.  என்னை யாரும் அசைக்க முடியாது...’’ என பேசினாராம். அடியும் வாங்கி, நொந்து  நூலான அந்த நபர், நேராக கோவை போலீஸ் கமிஷனர் ஆபீசில் சரணடைந்தாராம். விவரம்  அறிந்த போலீஸ் கமிஷனர், உடனடியாக அந்த இலைக்கட்சி கவுன்சிலர் மீது எப்ஐஆர்  பதிவு செய்ய உத்தரவிட்டார். அத்துடன், கெத்து காட்டிய எஸ்ஐக்கு சஸ்பெண்ட்  என்ற பரிசை கமிஷனர் கொடுத்தாராம். இதனால, கரன்சி மேல் கண் வைக்கும்  காக்கிகள் கலங்கி போய் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்