மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இளையராஜா நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து
2022-07-06@ 20:37:54

டெல்லி: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துறைசார் வல்லுநர்களுக்கு அவர்களின் சேவையை கெளரவிக்கும் வகையில் நியமன எம்பி பதவி வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், விளையாட்டு, உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்.
அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் இளையராஜா, பி,டி, உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோருக்கு நியமன எம்பியாக அறிவித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இளையராஜா நியமனம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா என பாராட்டு தெரிவித்துள்ளார்.
1976ல் அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட இந்த மொழிகள் மட்டுமின்றி ஆங்கில படத்துக்கும் இசையமைத்துள்ளார். சின்பொனி இசைத்து உலக இசைக் கலைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இளையராஜா.
மேலும் செய்திகள்
பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!
நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி
ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது 3 வீரர்கள் வீரமரணம்: வீரமரணம் அடைந்தவர்களில் தமிழரும் ஒருவர்
75வது சுதந்திர தின கொண்டாட்டம்: இடுக்கி அணையில் இருந்து மூவர்ணங்களில் பாய்ந்த தண்ணீர்
கணவரை பிரிந்த இளம்பெண் தோழியுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
ரக்ஷா பந்தன் பண்டிகை பிரதமர் மோடி வாழ்த்து
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!