8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தி.மலை போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பு
2022-07-06@ 17:46:56

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13.7.2019 அன்று மாலை வீட்டுக்கு வெளியே தெருவில் தனியாக விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த சுகந்தன் (19) என்பவர், சிறுமியை கட்டாயப்படுத்தி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுகந்தனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சுகந்தனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து, சுகந்தன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடம் ஜவுளி நிறுவன அதிபரை கடத்த முயற்சி; ஆந்திர கும்பல் கைது-போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் விசாரணை
பூவிருந்தவல்லி அருகே சொந்த வீட்டில் 500 சவரன் நகை திருட்டு: 2 பேர் கைது
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!: காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம்..எச்சரித்த வி.ஏ.ஓ. உதவியாளரை தாக்கிய தந்தை, மகன் கைது..!!
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது
லாட்ஜுக்கு வரவழைத்து மாணவியை பலாத்காரம் செய்த பிரபல டிக் டாக் நடிகர் கைது: செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள் சிக்கின
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!