ஆசைவார்த்தை கூறி பணம் பறிப்பு; திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பெண்ணின் கணவருக்கு ஆபாச வீடியோ: மனைவியை பிரிந்த வாலிபர் கைது
2022-07-06@ 17:44:21

பெரம்பூர்: கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த பெண், திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதால் அவரது கணவருக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர் எம்ஜிஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். இதையடுத்து கொளத்தூர் அண்ணாசிலை பகுதியில் உள்ள பிரவுசிங் சென்டரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடையின் உரிமையாளர் அருணாச்சலம் (28) என்பவருடன் அந்த பெண்ணுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலம் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்துள்ளார்.
இரண்டுபேருமே கருத்துவேறுபாடு காரணமாக மனைவி, கணவரை பிரிந்துவாழ்ந்துவருவதால் இருவரும் அடிக்கடி வெளியே சென்றுவந்ததுடன் தம்பதிபோல் வாழ்ந்துள்ளனர். ஒருகட்டத்தில் அப்பெண், அருணாச்சலத்தை திருமணம் செய்துக்கொள்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் அருணாச்சலம் அடிக்கடி அப்பெண்ணின் குடும்ப தேவைக்காக பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்பெண் பிரிந்துபோன கணவருடன் மீண்டும் சேர்ந்துவாழ ஆரம்பித்துள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் அருணாச்சலம் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் கோபம் அடைந்தார். ‘என்னை ஏமாற்றிவிட்டாய்’ என்று அடிக்கடி அப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால்அப்பெண் வேலையில் இருந்து நின்றுவிட்டார். இதனிடையே தன்னுடன் அப்பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், இதுசம்பந்தமாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தார். இந்த நிலையில், நேற்று அருணாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில்,‘‘என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏராளமான பணத்தை வாங்கினார்.
தற்போது திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒரேஒரு வீடியோவை மட்டும் அவரது உறவினர்களுக்கு அனுப்பி விட்டேன். மற்றபடி என்னிடம் எந்த வீடியோவும் இல்லை’’ என்று அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அருணாசலத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி கடற்கரை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கையும் களவுமாக சிக்கினர்
புதுச்சேரி கன்னியகோயில் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நெய்வேலியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது-6.5 கிலோ பறிமுதல்: பொறி வைத்து பிடித்த போலீஸ்
கோபி அருகே சந்தன மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளி அதிரடி கைது-4 கிலோ பறிமுதல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலம்
சிறுவன் ஓட்டி சென்ற பைக் மோதி 3 வயது சிறுமி பரிதாப பலி: தந்தை அதிரடி கைது
டோல்கேட்டில் தாமதம் தட்டிக் கேட்டவர் மீது சரமாரியாக தாக்குதல்
ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியிடம் டிஐஜி கிடுக்கிப்பிடி விசாரணை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!