வேளச்சேரியில் மின்சாரம் பாய்ந்து; தூய்மை பணியாளர் பலி!
2022-07-06@ 17:32:54

வேளச்சேரி: வேளச்சேரி அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர் (50). இவர் சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வேளச்சேரி பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர், 3வது பிரதான சாலை சந்திப்பில் குப்பைகளை அகற்றும் பணியில் சேகர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பூமிக்குள் புதைத்திருந்த மின்வயரில் கசிவு ஏற்பட்டதில், சேகர்மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே சேகர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
பேராசை..பெருநஷ்டம்: அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ரூ.13,125 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்கள்..பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விளக்கம்..!!
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழன் என்ற முறையில் பெருமிதம் அடைகிறேன்!: செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு..!!
போதை விழிப்புணர்வு வாரம் கொண்டாட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் இரண்டு அணிகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குஜராத் விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் 1,000 முதலைகளை பராமரிக்க போதிய இடவசதி உள்ளது: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!