SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை

2022-07-06@ 15:12:13

தண்டையார்பேட்டை: சென்னையில் வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் இன்று 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இன்று மீண்டும் துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கப்பல்களில் இருந்து வரும் வெளிநாட்டு சரக்குகள் அடங்கிய கன்டெய்னர்களை வாடகை அடிப்படையில் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் ஏற்றி, 35க்கும் மேற்பட்ட சரக்கு பெட்டகங்களில் இறக்கி வரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பெட்டக முனையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு, சுங்க பரிசோதனைக்கு பின் வெளியிடங்களுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரெய்லர் லாரிகளில் கன்டெய்னர் லாரிகள் மூலம் ஏற்றி செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கன்டெய்னர் டிரெய்லர் லாரிகளுக்கு கடந்த 2014ம் ஆண்டு நிர்ணயித்த வாடகை கட்டணமே தற்போது வரை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் டீசல், சுங்க கட்டணங்கள் உயர்ந்தும், இந்த வாடகை கட்டணத்தை உயர்த்தி தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் துறைமுக அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் வாடகை கட்டணத்தை உயர்த்தி தரப்படவில்லை.இந்நிலையில், கன்டெய்னர் டிரெய்லர் லாரிகளின் வாடகை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கன்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி நடத்தி வருகின்றனர். 2வது நாளான நேற்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் துறைமுக அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வாடகை கட்டணம் உயர்த்துதல் குறித்து சுமூக முடிவு எட்டாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து, இன்று 3வது நாளாக காலை முதல் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுக பகுதிகளில் டிரெய்லர் லாரிகளுடன் உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான சரக்குகள் ஏற்றி, இறக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இன்றும் துறைமுக அதிகாரிகள் மற்றும் சரக்குகளை கையாளும் தனியார் நிர்வாகத்தினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வருடந்தோறும் 10 சதவீதம் வாடகை உயர்வு என கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 80 சதவீத வாடகை நிலுவையை வழங்கும் வரை எங்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என துறைமுக ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்