தையல்காரர் கொலை வழக்கில் ஐதராபாத்தில் ஒருவன் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை
2022-07-06@ 14:52:28

ஐதராபாத்: உதய்பூர் தையல்கார் கன்னையா லால் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவனை ஐதராபாத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஜூன் 28ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இருவரும் தாங்கள் கன்னையா லாலை கொன்ற விபரத்தை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மற்றொரு வீடியோவை வெளியிட்டனர்; அதில் அவர்கள் கொலை சம்பவத்தை பெருமையாகவும், பிரதமர் மோடியை குறிவைத்து மிரட்டல் விடுத்தனர். அதே நாளில் குற்றவாளிகள் இருவரும் போலீசாரல் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், மேற்கொண்ட கொலையாளிகளுடன் ெதாடர்புடைய பீகாரைச் சேர்ந்த ஒருவனை அதிகாரிகள் தேடிவந்தனர்.
இந்நிலையில், ஐதராபாத் அடுத்த சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அந்த மர்ம நபரை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். விசாரணைக்காக அவனை மாதப்பூரில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உடல் முழுவதும் கொப்பளங்கள்!: ராஜஸ்தான், குஜராத்தில் கொத்து கொத்தாக மரணிக்கும் பசு மாடுகள்..3,000 கால்நடைகள் உயிரிழப்பு..!!
வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும், கம்பீரமும் இருக்கும்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம்..!
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர் திறப்பு 5040 கனஅடியாக அதிகரிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா... 41 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஷ்யாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!: ஒரே நேரத்தில் பக்தர்கள் வெளியேற முயன்றதால் விபரீதம்..!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!