இமாச்சலில் கொட்டி தீர்த்த கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 16 வயது சிறுமி பலி; 2 பேர் படுகாயம்
2022-07-06@ 14:48:58

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் ஏற்பட்ட மெகா வெடிப்பால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலபிரதேசத்தில் காலை முதல் மிக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் குலு மாவட்டம் மணிகரன் பள்ளத்தாக்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஜோல்ஜ் என்ற கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளை பாறைகளும், டன் கணக்கில் சரிந்த மண்ணும் தரைமட்டமாக்கி விட்டன. திடீர் வெள்ளத்தில் சிக்கிய 5 கிராமத்தினரை காணவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
சிம்லாவில் கினானூர் என்ற இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானங்களை மூடியது. இந்த விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவுகளின் எதிரொலியாக NH-5 நெடுஞ்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த மழையால் உத்தராகண்ட் மாநிலத்திலும், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதால் அப்பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்படையினர் விரைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும், கம்பீரமும் இருக்கும்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம்..!
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர் திறப்பு 5040 கனஅடியாக அதிகரிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா... 41 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஷ்யாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!: ஒரே நேரத்தில் பக்தர்கள் வெளியேற முயன்றதால் விபரீதம்..!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்
விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளியும், தமிழ்நாட்டுக்கு கிள்ளியும் கொடுத்த ஒன்றிய அரசு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!