தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர் கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகர் மீது போலீசில் பரபரப்பு புகார்
2022-07-06@ 01:04:16

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர் கார்த்தி, விஷால் மற்றும் நாசருக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தென்னிந்திய நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளனர். நடிகர் சங்க வளர்ச்சி பணியில் 3 நிர்வாகிகளும் இரவு பகலுமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக துணை நடிகர் ராஜதுரை உள்ளார்.
அவர் சங்கத்தின் விதிகளுக்கு புறம்பாக வாட்ஸ்அப் குழுவில் சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ள நடிகர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த குரல் பதிவு வைரலாகி வருகிறது. எனவே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வாட்ஸ்அப் குரல் பதிவை நீக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளர். தென்னிந்திய நடிகர் சங்கம் மேலாளர் அளித்த புகாரின்படி தேனாம்பேட்டை போலீசார் அவதூறு வாட்ஸ்அப் குரல் பதிவை வைத்து துணை நடிகர் ராஜதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகளுக்கு துணை நடிகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
South Indian Actors Association Executive Actor Karthi Vishal Death Threat Supporting Actor Police Complaint தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகி நடிகர் கார்த்தி விஷால் கொலை மிரட்டல் துணை நடிகர் போலீசில் புகார்மேலும் செய்திகள்
தண்டையார்பேட்டையில் பழிக்கு பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: 11 பேர் கைது
கடையில் போதை பொருள் விற்ற வியாபாரி சிக்கினார்
திருமணம் செய்ய போலீஸ்காரர் மறுப்பு: கத்தியால் கையை கிழித்து பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
ஈரோடு, அந்தியூரில் போதை மாத்திரை விற்பனை 7 பேர் கும்பல் கைது-2 பேருக்கு வலை
போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடம் ஜவுளி நிறுவன அதிபரை கடத்த முயற்சி; ஆந்திர கும்பல் கைது-போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் விசாரணை
பூவிருந்தவல்லி அருகே சொந்த வீட்டில் 500 சவரன் நகை திருட்டு: 2 பேர் கைது
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!