சூர்யாவுக்கு ஜோடியாகிறார் பூஜா ஹெக்டே
2022-07-06@ 00:58:42

சென்னை: சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். விக்ரம், ராக்கெட்ரி படங்களில் கவுரவ வேடங்களில் நடித்த சூர்யா, இப்போது பாலா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படமும் அவரிடம் இருக்கிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தார் சூர்யா. வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கு முன்பாக சிறுத்தை சிவா படத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளாராம். பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, இந்தியில் ரன்வீர் சிங்குடன் சர்க்கஸ், சல்மான் கான் ஜோடியாக கபி ஈத் கபி தீவாலி, அக்ஷய்குமாருடன் ஒரு படம் என நடித்து வருகிறார். இந்த படங்களில் நடித்தபடி, சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
மேலும் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 10வது சுற்று போட்டிகள் தொடங்கின: பதக்க வாய்ப்பை உறுதி செய்யுமா இந்திய அணி?
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு.: ஆக.10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
கோட்டூர்புரம் நூலகத்தை மாற்ற இடைக்கால தடை விதித்தது ஏன்?: ஓய்வு நீதிபதி சந்துரு பரபரப்பு
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி அரசு அறிவித்த மின்னஞ்சலில் தமாகாவினர் பதிவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்ட நிறைவு விழா
சென்னை ஆலந்தூரில் பேருந்து மோதி பெயர் பலகை விழுந்து விபத்து.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ரூ.3 லட்சம் நிதியுதவி
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!