சில்லி பாய்ன்ட்...
2022-07-06@ 00:54:45

* மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 12 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 36வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 2 இடம் முன்னேறி 29வது இடத்தில் உள்ளார்.
* அமெரிக்க மகளிர் சீனியர் கிரிக்கெட் அணி மற்றும் யு-19 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் ஷிவ்நரைன் சந்தர்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
* நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் ஊதியம், தேசிய ஆண்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் வாங்கும் ஊதியத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டுள்ளது.
* ‘டெஸ்ட் போட்டிகளை நாங்கள் சிறப்பாகவே ஆரம்பிக்கிறோம். ஆனால், ஃபினிஷிங்தான் சரியில்லை’ என்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
* பர்மிங்காம் டெஸ்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான ஓவர்களைப் பூர்த்தி செய்யத் தவறிய இந்திய அணிக்கு அபராதமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 2 புள்ளிகள் குறைக்கப்பட்டதால் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன.
மேலும் செய்திகள்
ஜிம்பாப்வேயுடன் முதல் ஒருநாள் போட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; தவான், கில் அசத்தல்
நியூசி.யை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போராடி தோற்றார் நடால்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் இகா ஸ்வியாடெக்; மேடிசன் கீஸ் வெற்றி: நடால் அதிர்ச்சி தோல்வி
ஆப்கனுக்கு எதிரான 5வது டி20; அயர்லாந்து அபார வெற்றி: தொடரை 3-2 என கைப்பற்றியது
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...