நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
2022-07-06@ 00:51:48

நெல்லை: திருநங்கைகள் குறைதீர்க்கும் முதல் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் திருநங்கைகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பேசுகையில், ‘‘பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாகவும், ஊர்க்காவல் படையில் வேலை வாய்ப்பு அளிப்பது தொடர்பாகவும், மாநகர போலீஸ் கமிஷனருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும், சிறந்த குடிமகளாக திகழவும், அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.’’ என்றார். கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசுகையில், ‘‘ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாக முகாம் நடத்தி கலந்தாய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள், முதுகலை பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். ’’ என்றார். பின்னர் கலெக்டர் விஷ்ணு அளித்த பேட்டியில், ‘‘ திருநங்கைகளுக்கு முதன் முறையாக குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அவர்களது இருப்பிடத்திற்கே சென்று குரூப்-2 மற்றும் குரூப்-4 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு 3 மாதங்களாக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது பெயர்களை அரசு கெசட்டில் மாற்றுவதற்காக சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். அதற்காக சிறப்பு அனுமதி பெற்று, அவர்கள் பகுதியில் முகாம் நடத்தி மனுக்கள் பெற்று பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்று திருநங்கைகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.’’ என்றார்.
மேலும் செய்திகள்
சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகையில் பிரத்யேக கேமரா அருங்காட்சியகம்...
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு
மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி
அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை
பள்ளி மைதானத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி
ஆரணியில் தொடர் முறைகேடு, பால் கூட்டுறவு சங்க தலைவி பதவி பறிப்பு; சென்னை கூடுதல் ஆணையர் அதிரடி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...