வரலாற்றில் முதன்முறையாக திருப்பதியில் ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை: 77,907 பக்தர்கள் தரிசனம்
2022-07-06@ 00:33:22

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதன்முறையாக ஒரேநாளில் ரூ.6.18 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன. வழக்கமாக ஜூன் 2வது வாரத்திலேயே பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் தொடங்கியும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கியூ காம்ப்ளக்ஸ்கள் நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதும் தொடர்கிறது. இதேபோல், நேற்று முன்தினம் ஒரே நாளில் 77,907 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். 38,267 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். இலவச தரிசனத்தில் 12 மணி நேரமும், ரூ.300 கட்டணம் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசித்தனர்.
இந்நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்தது. இது தேவஸ்தான வரலாற்றில் முதன்முறை ஆகும். கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ரூ.5.73 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. இதுவே அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக இருந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிகபட்ச காணிக்கை கிடைத்துள்ளது. வழக்கமாக பிரமோற்சவ நாட்களில் மட்டும்தான் அதிகபட்ச காணிக்கை கிடைக்கும். ஆனால் கடந்த முறையும் (1-4-2012), இம்முறையும் சாதாரண நாளில் அதிகபட்ச காணிக்கை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சென்னை நீர் நிலைகள் தொடர்பான வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நில மோசடி வழக்கில் ஆக. 22 வரை சஞ்சய் ராவத் சிறையிலடைப்பு: மும்பை நீதிமன்றம் உத்தரவு
மின்சார சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைப்பு
நிலக்கரி முறைகேடு வழக்கு.: முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
உடல் முழுவதும் கொப்பளங்கள்!: ராஜஸ்தான், குஜராத்தில் கொத்து கொத்தாக மரணிக்கும் பசு மாடுகள்..3,000 கால்நடைகள் உயிரிழப்பு..!!
வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும், கம்பீரமும் இருக்கும்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம்..!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!