மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் சக்கரபாணி பேச்சு
2022-07-06@ 00:32:58

சென்னை: அனைத்து தரப்பு மக்களுக்கும் ஊட்டசத்து மிகுந்த உணவு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நேற்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பேசியதாவது:
அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கலைஞரால் தமிழக மக்களுக்குச் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. மேலும், பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டில் இருந்து வாரத்துக்கு ஐந்து நாட்களுக்கு முட்டை வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.
இதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருள்களும் ரூ.4 ஆயிரம் ரொக்கத் தொகையும் 2021 ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கியதோடு 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களையும் வழங்கியது.
நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட பல்முனை வறுமைக்குறியீடு அறிக்கையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 சதவீதம் மட்டுமே ஏழ்மையில் உள்ளனர் என்றும் ஆனால் இந்தியா முழுமைக்கும் 25.01 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருப்பது இச்சாதனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
75வது சுதந்திர தின விழா நாளை கோலாகல கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் ஏற்றுகின்றனர்.! தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’
எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!
மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை போக்குவரத்து மாற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!