SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதுகாப்பு பண வைப்புத்தொகை செலுத்துவதில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு விலக்கு: தமிழக அரசு அறிவிப்பு

2022-07-06@ 00:32:41

சென்னை: அரசின் டெண்டர்களில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு பண வைப்புத் தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுதொடர்பான, அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மாநிலத்திற்குள் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ‘உத்யம் பதிவுச் சான்றிதழின் நகல் அல்லது இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வேறு ஏதேனும் செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழ் அல்லது ஆதாரத்தின் நகலை சமர்ப்பித்தால், அரசு டெண்டர்களுக்கு செலுத்த வேண்டிய பாதுகாப்பு பண வைப்புத் தொகையை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அரசாங்கத் துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சங்கங்கள் மூலம் நடத்தப்படும் டெண்டர்களில் பங்கேற்பதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை ​​கொள்முதல் நிறுவனம் ஆய்வு செய்யலாம். விண்ணப்பதாரர்களின் நற்சான்றிதழ்களை சரிபார்ப்பதில் கொள்முதல் நிறுவனங்களை திருப்திப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்