SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் சென்னையில் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை

2022-07-06@ 00:31:16

சென்னை: சென்னையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  சென்னையில் கடந்த 4ம்தேதி நிலவரப்படி 5,936 பேருக்கு ெகாரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.  4ம்தேதி ஒரு நாள் மட்டும் 942 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பாதித்த நபர்களில் 5,264 பேர் வீட்டுத் தனிமையிலும், 57 பேர் மாநகராட்சியின் கொரோனா பாதுகாப்பு மையங்களிலும், 263 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

எனவே, பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதி செய்ய வேண்டும்.  

இதுபோன்ற இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் ஆய்வின்போது முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இணை நோயுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 3,76,917 பேரும் மாநகராட்சியின் சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்ளுக்கு இன்று முதல் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்