அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
2022-07-06@ 00:28:50

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா வரவேற்றார். இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், மதுராந்தகம் ஆர்டிஓ சரஸ்வதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் மருத்துவ முகாமை பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டனர். அடையாள அட்டை இல்லாதவர்கள் பதிவு செய்யப்பட்டு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், ஏற்கனவே மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மூன்று சக்கர சைக்கிள், இதர உபகரணங்கள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவர் சான்று, ஆகியவை பதிவு செய்து கொண்டனர்.
Tags:
Printout Municipal Union Office PWD Identity Card அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மாற்றுத்திறனாளி அடையாள அட்டைமேலும் செய்திகள்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!