நாய்களிடமிருந்து மயிலை காப்பாற்றிய வாலிபர்: பொதுமக்கள் பாராட்டு
2022-07-06@ 00:24:18

ஆவடி: நாய்கள் விரட்டி சென்ற மயிலை மீட்டு வாலிபர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆவடி அடுத்த பட்டாபிராம் புதிய இந்திரா நகரைச் சேர்ந்தவர் அபினேஷ்(24). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பட்டாபிராம் எம்ஜிஆர் நகர் அருகே வந்தபோது நாய்கள் மயில் ஒன்றை துரத்தி செல்வதை பார்த்துள்ளார். இதையடுத்து பைக்கை நிறுத்திவிட்டு நாய்களிடம் இருந்து மயிலை மீட்டார். நாய்கள் கடித்ததில் மயிலுக்கு லேசான காயங்கள் இருந்தன. பின்னர் மீட்கப்பட்ட மயிலை பட்டாபிராம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார், திருவள்ளூர் மாவட்ட வனக்காப்பாளர் விக்னேஷிடம் மயிலை ஒப்படைத்தனர். மயிலை பெற்றுக்கொண்ட வனக்காளப்பாளர், காட்டில் விடுவதாக தெரிவித்துள்ளார். தேசிய பறவையான மயிலை நாய்களிடம் இருந்து காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரை பொதுமக்களும், போலீசாரும் பாராட்டினர்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜூ அதிரடி
மின் சட்ட திருத்த மசோதா தாக்கலை கண்டித்து திருச்சியில் நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்: முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு
தொடர் விடுமுறை எதிரொலி ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி
சித்திரை கார் அறுவடை தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்காக ஆந்திராவில் இருந்து வாத்துக்கள் வருகை-கழிவுகள் உரமாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
விலையில்லா ஆடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்-கால்நடை கூடுதல் இயக்குனர் ஆலோசனை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!