சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் 4 வருடங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை
2022-07-06@ 00:21:33

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் 4 வருடமாக எரியாத உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் அம்மம்பாக்கம், ராமநாதபுரம், கூனிப்பாளையம், பென்னலூர்பேட்டை, ராசாபாளையம், வெலமகண்டிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள், வியாபாரிகள், மாணவ - மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என அதிகமானோர் உள்ளனர். இவர்கள் வியாபாரம், வேலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல இருசக்கர வாகனங்கள், பஸ், வேன் ஆகிய வாகனங்களில் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ள சீத்தஞ்சேரி கிராமத்திற்கு வந்து அங்கிருந்து திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.
மேலும் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்வோரும் சீத்தஞ்சேரிக்கு வந்து வீடு திரும்புவார்கள். இதற்கிடையில், சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாமல் இருந்தது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் செயின் பறிப்பு, திருட்டு போன்றவைகளும் நடைபெற்றது. மேலும் அங்குள்ள கடைகளில் திருட்டு சம்பவங்களும் நடந்தது. இதை தவிர்க்க சீத்தஞ்சேரி கிராமத்தின் மையப்பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அப்போதைய எம்பி (திமுக) ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சத்தை அவர் ஒதுக்கினார். பின்னர் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உயர் கோபுர மின் விளக்கு சேதமடைந்து கடந்த 4 வருடங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்லும் 20 கிராம மக்களும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், பூண்டி ஒன்றியத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:
Seethanchery Bus Stop 4 Years High Tower Light சீத்தஞ்சேரி பஸ் நிறுத்த 4 வருட உயர்கோபுர மின்விளக்குமேலும் செய்திகள்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்: முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு
தொடர் விடுமுறை எதிரொலி ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி
சித்திரை கார் அறுவடை தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்காக ஆந்திராவில் இருந்து வாத்துக்கள் வருகை-கழிவுகள் உரமாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
விலையில்லா ஆடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்-கால்நடை கூடுதல் இயக்குனர் ஆலோசனை
திருவலம் பொன்னையாற்றில் திடீர் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது உயிரோட்டமுள்ள குடை சிற்பங்கள், வற்றாத சுனை நீர் கொண்ட மாமண்டூர் குகை கோயிலை சுற்றுலா தலமாக்க வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!