SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாகனம் மோதி மூதாட்டி பலி

2022-07-06@ 00:20:48

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் சத்திரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகம்மாள்(76). நேற்று முன்தினம் தான் வீட்டில் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். வெகுநேரமாகியும் மாடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் மாடுகளை தேடிச்சென்றார். இந்நிலையில், அவர் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையோரம் சென்றபோது திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகம்மாள் பலியானார். புகாரின்படி மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்