ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் இலவச வெள்ளாடுகள்: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்
2022-07-06@ 00:20:16

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், புதுசத்திரம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வெள்ளாடுகள் வழங்கி தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு தலா ரூ.19,040 வீதம் ரூ.19 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அ.வெங்கடரமணன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயஸ்ரீ மகா, ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்தபாபு, சி.அண்ணாகுமார், நேமம் என்.எஸ்.ஜெ.பிரேம்நாத், கு.தமிழ்செல்வி, நிறைமதி தங்கராஜ், திமுக நிர்வாகிகள் கட்டதொட்டி எம்.குணசேகர், பா.கந்தன், ஜி.சி.சி.கருணாநிதி, கே.சுரேஷ்குமார், எம்.இளையன், குணசேகரன், பி.சி.மூர்த்தி, வாசுகி எட்வின், ஜி.சுகுமார், ஜி.பி.பரணிதரன், பிரவின்குமார், பிரதீப், ராஜேஷ், உதயா, கால்நடை உதவி மருத்துவர்கள் முபாரக், லோகவானி, சாந்தி, நாகபூஷணம் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை உதவி மருத்துவர் வி.பிரசாத் நன்றி கூறினார்.
Tags:
Destitute women transgender free goats worth Rs.19 lakh Collector MLA ஆதரவற்ற பெண்கள் திருநங்கை ரூ.19 லட்சம் மதிப்பில் இலவச வெள்ளாடுகள் கலெக்டர் எம்எல்ஏமேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனியை வீசி பாஜகவினர் அராஜகம்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி ஊர்வலம்: இறுதிச்சடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் உடல் அடக்கம்...
ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!
செய்யூர் அருகே அதிமுக தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் திடீர் சாலை மறியல்
திருத்தணி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி; பயணிகள் கோரிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!