மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு: அடைப்பு ஏற்படும் அபாயம்
2022-07-06@ 00:19:03

ஆவடி: மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடி, செக்போஸ்ட் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து தனியார் ஒருவர் கடை வைத்துள்ளார். இங்கு பழைய ரயில்வே மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வடிகால் எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை. மேலும் அந்தப்பொருட்கள் மழைநீர் வடிகாலில் விழுந்து அடைப்பு ஏற்பட்டால் அதை ஆவடி மாநகராட்சியால் சரிசெய்யக் கூட முடியாதபடி காயலான் கடை பொருட்களை அடுக்கிவைத்துள்ளனர்.
மழைநீர் வடிகாலை பயன்படுத்த இந்த தனியார் நிறுவனம் ஆவடி மாநகராட்சிக்கு வாடகை கூட தருவதில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மாநகராட்சியில் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தனியார் வியாபாரியிடம் அபராதம் வசூலிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப்பொருட்கள் மழைநீர் வடிகாலில் விழுந்து அடைப்பு ஏற்பட்டால் அதை ஆவடி மாநகராட்சியால் சரிசெய்யக் கூட முடியாதபடி காயலான் கடை பொருட்களை அடுக்கிவைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கருமுட்டை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!