SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவரப்பேட்டை பகுதியில் குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் அவதி

2022-07-06@ 00:11:08

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியுடன் செல்கின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை வழியாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் கீழ்முதலம்பேடு, புதுகும்மிடிப்பூண்டி, ஏனாதிமேல்பாக்கம், ஐயர்கண்டிகை, எருக்குவாய், மேல்முதலம்பேடு, மேலக்கழனி, பூவலம்பேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்கள், டிராக்டர் மூலமாக வேளாண் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.

மேலும் இந்த சாலை வழியாக அரசு பேருந்து, தனியார் பள்ளி பேருந்து தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வௌி மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு இரவு பகலாக சென்று வருகின்றன. இந்நிலையில், கவரப்பேட்டையையொட்டி உள்ள தனியார் கல்லூரி எதிரே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலை வளைவு பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

மேலும் சிலர் ஆபத்தான முறையில் அதிவேகமாகவும் செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை வளைவு பகுதி குண்டும், குழியுமாக மாறி சேதமடைந்துள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் இதுவரை 14 பேர் இந்த சாலையில் விழுந்து காயமடைந்துள்ளனர். மேலும் கனரக வாகனங்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன. இது சம்பந்தமாக பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குண்டும், குழியுமாக மாறிய தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கவரப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை 14 பேர் இந்த சாலையில் விழுந்து காயமடைந்துள்ளனர். மேலும் கனரக வாகனங்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்