பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; காரில் ஆட்டம் போட்ட குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
2022-07-05@ 20:28:38

புதுடெல்லி: பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஆயுதங்களுடன் காரில் ஆட்டம் போட்ட மேலும் 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு வீரர் அங்கித் மற்றும் அவரது கூட்டாளி சச்சினை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மூசேவாலாவை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் காரில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் பின்னணியில் பஞ்சாபி பாடல் ஒலிக்கிறது. அப்போது குற்றவாளி ஒருவர், தனது துப்பாக்கிகளைக் காட்டுவதும் வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோவில் காணப்படும் சச்சின், அங்கித், பிரியவ்ரத், கபில் ஆகிய குற்றவாளிகள் உள்ளனர்.
இவர்களில் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தீபக் என்பவன் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளான். சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்த இவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 கையெறி குண்டுகள், 9 மின்சார டெட்டனேட்டர்கள், 3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை; சிபிஐ நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேருக்கு கொரோனா... 47 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கி, குண்டுகளுடன் கரை ஒதுங்கிய படகு தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக பீதி
ஏலம் எடுத்தவர்களுக்கு கடிதம், 5ஜி சேவைக்கு தயாராகுங்கள்; ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு பேபி அணையில் 15 மரங்களை வெட்ட உடனடி நடவடிக்கை; கேரள வனத்துறைக்கு உத்தரவு
வங்கியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.11 கோடி சில்லறை மாயம்; 25 இடங்களில் சிபிஐ ரெய்டு
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...