குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
2022-07-05@ 19:44:53

குன்னூர்: குன்னூர் பள்ளத்தாக்கில் 2 குட்டிகளுக்கு யானைக்கூட்டம் நடைபயிற்சி மற்றும் உணவு, குடிநீர் தேடும் வழித்தடத்தை காண்பித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இரண்டு குட்டிகளுடன் 10 யானைகள் குடிநீர், உணவு தேடி வந்துள்ளன. யானைக்கூட்டத்தின் தலைவன் யானைகளை வழிநடத்துகிறது. தாய் யானை குட்டிகளை அக்கறையுடன் பாதுகாப்பாக அழைத்துச்செல்கிறது.
குடிநீர், உணவு தேடி செல்லும் வழியை குட்டிகளுக்கு நன்கு கற்பிக்கின்றன. அதன்படி குட்டிகளும் பின்னே செல்கின்றன. இரண்டு குட்டிகளுடன் யானைக்கூட்டம் விளையாடிச்செல்வது காண்போரை பரவசப்படுத்துகிறது. யானைக்கூட்டம் அவ்வப்போது சாலையை கடக்கும்போது வாகனங்களால் அவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் தவிர்க்க வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 10 யானைகளும் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே உள்ள கேஎன்ஆர் பகுதியில் சாலையை கடந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ரயில் தண்டவாளப்பகுதியில் முகாமிடுகின்றன.
தாய் யானை பள்ளத்தாக்கு இடுக்குகளில் சென்று குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. குட்டிகளும் தாய் யானைபோன்று பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து செல்கிறது. அப்போது அவைகள் வழுக்கி விழுந்து எழுகிறது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. மூத்த யானைகள் முன்னும், பின்னும் வழிநடத்துகிறது. குட்டிகள் யானை கூட்டத்தின் நடுவே பத்திரமாக செல்கின்றன. யானைக்கூட்டம் வரவால் இந்த பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகையில் பிரத்யேக கேமரா அருங்காட்சியகம்...
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு
மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி
அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை
பள்ளி மைதானத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி
ஆரணியில் தொடர் முறைகேடு, பால் கூட்டுறவு சங்க தலைவி பதவி பறிப்பு; சென்னை கூடுதல் ஆணையர் அதிரடி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...