குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் வாய்ந்தது; குன்னூர் பர்லியார் பண்ணையில் துரியன் பழம் சீசன் துவங்கியது
2022-07-05@ 19:31:07

குன்னூர்: குன்னூரில் உள்ள பர்லியார் பழ பண்ணையில் குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் உள்ளது என நம்பப்படும் துரியன் பழம் சீசன் துவங்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில், மருத்துவ குணங்கள் நிறைந்த துரியன் பழ மரங்கள் உள்ளன. 35 மரங்களில் தற்போது குழந்தை பாக்கியத்தை தரும் மருத்துவ குணம் வாய்ந்த துரியன் பழங்கள் காய்க்க துவங்கியுள்ளது.
இந்த ஆண்டு பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. இந்த பழத்தை உண்பதன் முலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்க கூடிய மருத்துவ குணம் கொண்டதாக கூறுவதால் ஆண்டுதோறும் விற்பனை அதிகரிக்கிறது. இங்குள்ள 35 மரங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், ஜூன், ஜூலை மாதங்களில் காய்க்கத் தொடங்கும் இந்த பழம் பழுத்து மரத்திலிருந்து தானாக கீழே விழும்.
அவற்றை சேகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பழங்களை விற்பனை செய்ய ஏலம் விடப்படுகிறது. வரும் வாரங்களில் ஏலம் விட தோட்டக்கலைத் துறையினா் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு உதகையில் பிரத்யேக கேமரா அருங்காட்சியகம்...
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு
மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி
அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை
பள்ளி மைதானத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி
ஆரணியில் தொடர் முறைகேடு, பால் கூட்டுறவு சங்க தலைவி பதவி பறிப்பு; சென்னை கூடுதல் ஆணையர் அதிரடி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...