மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவன்...தட்டிக்கேட்ட மகனை பீர்பாட்டிலால் குத்தியதால் மனைவி ஆத்திரம்!!
2022-07-05@ 17:03:52

மயிலாடுதுறை: மதுபோதை தலைக்கேறி, மகனை பீர் பாட்டிலால் கிழித்த கணவனை, மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ளது. மணல்மேடு அடுத்த கொற்கை கிராமத்தை சேர்ந்த மகாதேவன், மதுபோதையில் அவரது மனைவி அமுதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த மகாதேவன், 3 மாதங்களுக்கு முன்பு அடித்து துன்புறுத்தி மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். வழக்கம் போல் நேற்றிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகாதேவன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தாயை அடித்து துன்புறுத்தியதால், மகாதேவனை தடுக்க அவரது மகன் ராஜராஜ சோழன் முயன்றுள்ளார். அப்பொழுது தனது கையில் இருந்த மதுபாட்டிலை உடைத்த மகாதேவன், எதிரே இருந்த மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமுதா அரிவாளால் மகாதேவனின் கழுத்தில் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மகனுடன் மணல்மேடு காவல்நிலையத்திற்கு சென்ற அமுதா, கணவனை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.
மேலும் செய்திகள்
3 குழந்தைகளை கொன்ற தாய் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது
கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை மருந்து விற்ற 3 பேர் கைது: 3 பைக்குகள் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் நகைக்கடையை உடைத்து 281 பவுன், 30 கிலோ வெள்ளி கொள்ளை; விவசாய நிலத்தில் வைத்து பங்கு பிரித்தனர்
கள்ளக்காதலால் குடும்ப தகராறு என்எல்சி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை; மகளின் காதலனுடன் சேர்ந்து மனைவியே வெறிச்செயல்
ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்த முயற்சி: கீழே குதித்து தப்பினார்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!