மேலூர் அருகே பயங்கரம், காதலித்து திருமணம் செய்த இளம்பெண் எரித்து கொலை: 3-வது திருமணம் செய்த கணவர், பெற்றோருடன் கைது
2022-07-05@ 15:34:25

மேலூர்: மேலூர் கொட்டாம்பட்டி அருகே இளம்பெண்ணின் பாதி எரிந்த சடலம் போலீசாரால் மீட்கப்பட்ட வழக்கில், அவரை எரித்து கொன்றது 3வது திருமணம் செய்த அவரது கணவர், மாமியார், மாமனார் மற்றும் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டியில் குன்றக்குடி ஆதீன மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் கடந்த 29ம் தேதி, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக மேலூர் டிஎஸ்பி பிரபாகரன், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் எரித்து கொலை செய்யப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுபட்டி அருகில் உள்ள பஞ்சயம்பட்டியை சேர்ந்த அர்ச்சுனன் மகள் ராசாத்தி (19) என தெரிந்தது. இவரது கணவர் அதே ஊரை சேர்ந்த ராசு மகன் அர்ச்சுனன் (25) என்பது தெரிந்தது. அர்ச்சுனனுக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்துள்ளது. 3வதாக ராசாத்தியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து ராசாத்தியை, ‘சொந்த ஊரான நத்தம் குட்டுபட்டிக்கு செல்லலாம்’ என்று கூறி அர்ச்சுனன் அழைத்து வந்துள்ளார். மேலூர், கொட்டாம்பட்டி அருகே பொட்டபட்டியை அடுத்துள்ள வெள்ளிமலை காட்டுப்பகுதிக்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அர்ச்சுனனின் தந்தை ராசு (50), தாய் அரியம்மாள் (48), உறவினர் துவரங்குறிச்சியை சேர்ந்த வல்லான் (எ) ரவி (42), நத்தம் சிவலிங்கம் (39) ஆகியோர் காத்திருந்தனர். 5 பேரும் சேர்ந்து ராசாத்தியை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பொட்டபட்டியில் உள்ள தென்னந்தோப்பிற்கு அவரது உடலை கொண்டு வந்து, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இருந்ததையடுத்து, பாதி எரிந்த நிலையில் அவரது உடலை போட்டு சென்று விட்டனர். கொட்டாம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நத்தம் அருகே உள்ள குட்டுபட்டியை சேர்ந்த ராசாத்தி என்பதும், அவரது கணவர் அர்ச்சுனன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அர்ச்சுனன், அவரது தந்தை ராசு, தாயார் அரியம்மாள் மற்றும் வல்லான் (எ) ரவி மற்றும் சிவலிங்கம் ஆகிய 5 பேரை கொட்டாம்பட்டி போலீசார், இன்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அர்ச்சுணனுக்கு, ராசாத்தி மீது சந்தேகம் இருந்ததும், அதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
3 குழந்தைகளை கொன்ற தாய் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது
கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை மருந்து விற்ற 3 பேர் கைது: 3 பைக்குகள் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் நகைக்கடையை உடைத்து 281 பவுன், 30 கிலோ வெள்ளி கொள்ளை; விவசாய நிலத்தில் வைத்து பங்கு பிரித்தனர்
கள்ளக்காதலால் குடும்ப தகராறு என்எல்சி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை; மகளின் காதலனுடன் சேர்ந்து மனைவியே வெறிச்செயல்
ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்த முயற்சி: கீழே குதித்து தப்பினார்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!