நெல்லை, தென்காசியில் பருவமழை தொடக்கம் சேர்வலாறு நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது-பலத்த காற்றும் நீடிப்பு
2022-07-05@ 12:24:02

நெல்லை : நெல் லை,தென்காசி மாவட்டங்களில் காற்று பலமாக வீசும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜுன் 1ம் தேதி தொடங்கும். ஆனால், நடப்பு ஆண்டில் ஜூன் முதல் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. அதன் பின்னர் மழை ஏமாற்றம் அளித்தது. தொடர்ந்து வெயில் அடித்த நிலையில் ஜூன் மாத இறுதி வாரத்தில் இருந்து மீண்டும் காற்று பலமாக வீசத் தொடங்கியது. இதையடுத்து கடந்த 3ம் முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த 3 தினங்களாக குற்றாலம் மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை முதல் அபாய அளவில் நீர் கொட்டியதால் ஐந்தருவி, பிரதான அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது.
சிலபகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணைபகுதியில் 16 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குண்டாறு, சிவகிரியில் தலா 6 மிமீ மழை பெய்தது. செங்கோட்டை, தென்காசியில் தலா 3 மிமீயும், கடனா, ஆய்க்குடி பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
இதனால் பாபநாசம் அணையில் 50.70 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று 52.90 அடியாக 2 அடி உயர்ந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு அணைக்கு நீர்வரத்து 667.25 கனஅடியாக இருந்தது. இது நேற்று வினாடிக்கு ஆயிரத்து 881.45 கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து 704.75 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் 64.47 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர் இருப்பு மேலும் 7 அடி உயர்ந்து 71.19 அடியானது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 76.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு நீர் இருப்பு 19 அடியாக உள்ளது. கொடுமுடியாறு நீர் இருப்பு 43.50 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டம் குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 7 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி நீர் இருப்பு 60 அடியாக உள்ளது. கருப்பாநதி நீர் இருப்பு 28.54 அடியாக உள்ளது. கடனா அணை நீர் இருப்பு 42 அடியாகும். அடவிநயினார் அணையில் 52.50 அடிநீர் இருப்பில் உள்ளது. இதனிடையே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்றும் பகலில் பலத்த காற்று வீசியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்றும் சிலபகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!