SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்

2022-07-05@ 01:23:41

சென்னை: நமக்கு நாமே திட்டம் மூலம் சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 118 வளர்ச்சி திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற பகுதி வளர்ச்சிக்கான நமக்கு நாமே திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்பை அளிக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும்  தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்தொடர்ச்சியாக  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்,  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி   அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிக்கூடங்களை மேம்படுத்துதல், பொதுக்காதார மையம், கற்றல் மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.300 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இத்திட்டத்தின்படி,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்கா, விளையாட்டுத் திடல் போக்குவரத்து தீவுத்திட்டுக்கள், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், மேம்படுத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர்கோபுர சோலார் மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மரக்கன்றுகளை நடுதல் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டடங்கள், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை  அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நவீன நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைத்தல், புதிய பாலங்கள், குறுக்கு பாலம், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடங்களை அமைத்தல், அங்கன்வாடி மையங்கள், பொதுக்கழிப்பறைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், புதிய தகனமேடைகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம். நமக்கு நாமே திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்களின் விவரம் திட்டப்பணி முடிவுற்றவுடன் அவ்விடத்தில் பெயர் பலகையில் காட்சிபடுத்தப்படும்.

அதன்படி,  நேற்றைய தேதி (4-7-22 ) வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4 குளங்களை சீரமைக்கும் பணிகள் ரூ.154.94 லட்சம் செலவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.138.48 லட்சம்  மற்றும் அரசு 16.45 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது. அதே போல் மாநகராட்சி பூங்கா, விளையாட்டு திடல், மற்றும் மரம் நடுதல் ஆகிய 56 பணிகளுக்கு ரூ.540.14 லட்சம் ஒதுக்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.321.50 லட்சம்  மற்றும் அரசு ரூ.218.65 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.

மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய 78 பணிகள் ரூ.308.89 மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.121.29 லட்சம் மற்றும் அரசு 187.60 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சி அழுகுபடுத்த மொத்தம் 66 இடங்களில் ரூ.353.19 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று  வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.237.88 லட்சம் மற்றும் அரசு ரூ.115.30 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4 குளங்களை சீரமைக்கும் பணிகள் ரூ.154.94 லட்சம் செலவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.138.48 லட்சம்  மற்றும் அரசு ரூ.16.45 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது. பொதுமக்கள் வசதிக்காக 23 இடங்களில் ரூ.82.52 மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் தனியார் பங்களிப்பானது ரூ.56.41 லட்சம் மற்றும் அரசு ரூ.26.11 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது. அதேபோல் மயானபூமி பராமரிப்பு பணிகள் 2 இடன்களில் ரூ.313.45 செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.313.45 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது. மருத்துவமனை, சாலை, சாலைத்தடுப்பு, நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற இதர மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.338.35 லட்சம் செலவில் 47 இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் தனியார் பங்களிப்பானது ரூ.162.93 லட்சம்  மற்றும் அரசு ரூ.175.42 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது. அதன்படி மொத்தம் 276 பணிகளுக்கு ரூ.2091.47 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் மொத்தம் தனியார் பங்களிப்பானது ரூ.1351.94 லட்சம் மற்றும் அரசு ரூ.739.53 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.

அதன்படி மொத்தம் 351 பணிகளுக்காக ரூ.2520.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 276 பணிகளுக்காக மொத்தம் ரூ.2091.47 லட்சங்கள் ஒதுக்கப்பட்டது (தனியார் பங்களிப்பு ரூ.1351.94 லட்சம், அரசின் பங்களிப்பு ரூ.739.53 லட்சம் வழங்கப்பட்டுள்ளது). இதில் 118 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.484.84 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. 100 பணிகள் ரூ.1094.29 லட்சத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. 35 பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பு ரூ.281.74 லட்சம் ஆகும். மீதமுள்ள 23 பணிகள் பல்வேறு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பு ரூ.230.96 லட்சம். இதர 73 பணிகளுக்கு 1053.71 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 351 பணிகளில் 118 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 100 பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 35 பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதர 73 பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* இருமடங்கு நிதி
தமிழ்நாடு அரசு சார்பில் நகர்ப்புற  கட்டமைப்புகளுக்கான திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின்படி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

* தனியார் பங்களிப்பு
பொதுமக்கள் அல்லது நிறுவனங்களின்  சார்பில் திட்டத்திற்கான மதிப்பீட்டில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு நிதி செலுத்தப்பட வேண்டும். மேலும், நீர்நிலைகள் புனரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளில் தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பாணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பை பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பிற்கு அதிகப்பட்ச வரம்பு எதும் இல்லை. நிறுவனங்களால் வழங்கப்படும் சமூக பங்களிப்பு நிதியையும் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். 50% மேல் பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் அந்த பணிகளை சென்னை மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் அவர்களே மேற்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்