சென்னை ராஜிவ்காந்தி சாலையில் விபத்தில் 2 வாலிபர்கள் பலி: போலீசார் விசாரணை
2022-07-05@ 01:22:12

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலையில் நடந்த வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலியானர்கள். சென்னை துரைப்பாக்கம் சூளைமாநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (30) மற்றும் அவரது நண்பர் பள்ளிகாரணை, மயிலை பாலாஜி நகர், சேர்ந்த ரூபேஸ் (27). இவர்கள் பைக்கில் துரைப்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது செம்மஞ்சேரி ஆலமரம் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்றபோது மற்றொரு வாகனத்தின் மீது மோதி நிலைதடுமாறி பைக்குடன் அதே சாலையில் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த வேன் அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியதுடன், அவர்களின் உடல்களை சில மீட்டர் தூரம் இழுத்து சென்றது. இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ரூபேஸ்சை மீட்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் ரூபேஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து வாகன விபத்தில் பலியான அபிஷ்க் மற்றும் ரூபேஸ் இருவரின் உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து சாலையில் உள்ள தேனீர் கடையில் பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது சிக்னலில் திரும்புவதற்காக ஒரு வாகனம் சாலையில் நின்று கொண்டிருந்த நிலையில் சிக்னலை கடந்து சென்றபோது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதும், பின்னால் வந்த வேன் வெகு தூரம் வாகனத்துடன் வாலிபரை இழுத்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இச்சம்பவ இடத்திற்கு தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையர் குமார் விசாரணை மேற்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தாம்பரம் போக்குவரத்துக்கு புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Rajiv Gandhi Road Chennai 2 youths killed in an accident police investigating சென்னை ராஜிவ்காந்தி சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி போலீசார் விசாரணைமேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!