பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
2022-07-05@ 01:18:33

திருவொற்றியூர்: திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் இருந்து மழைநீர் வெளியேற முறையாக பைப்லைன் அமைக்காததால், சாலையில் அருவிபோல் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் பைப்லைன் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் பல இடங்களில் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் சாலையில் அருவிபோல் கொட்டுகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், அதுபோன்ற நேரங்களில் விம்கோ நகர், தேர, போன்ற பல இடங்களில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் இருந்து மழைநீர் அருவி போல் சாலையில் கொட்டியது. இதனால், அவ்வழியே சென்ற இருச்கர வாகன ஓட்டிகள் நனைந்து பெரிதும் சிரமப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பலர், மழையில் நனையாமல் இருக்க சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னர் சென்னறர். அவ்வாறு நின்றவர்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் பைப்லைன் அமைக்க தவறிய இடங்களில், உடனடியாக பைப்லைன் அமைத்து, சாலையில் தண்ணீர் ஒழுகாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
Pipeline rain water leakage waterfall scene metro rail flyover public distress பைப்லைன் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சி மெட்ரோ ரயில் மேம்பாலம் பொதுமக்கள் தவிப்புமேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!