ஷபாலி - மந்தனா அதிரடி ஆட்டம்: தொடரை வென்றது இந்தியா
2022-07-05@ 00:26:15

பல்லெகலே: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இலங்கை சென்றுள்ள இந்திய மகளிர் அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, 2வது போட்டி பல்லெகலேவில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச, இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 173 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அமா காஞ்சனா ஆட்டமிழக்காமல் 47 ரன் விளாசினார். நிலாக்ஷி டி சில்வா 32, கேப்டன் சமரி அத்தப்பட்டு 27 ரன் எடுத்தனர். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 4 (10-1-28-4), மேக்னா சிங், தீப்தி சர்மா தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா - ஸ்மிரிதி மந்தானா அபாரமாக விளையாடி 25.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 174 ரன் எடுத்து இமாலய வெற்றியை பதிவு செய்தனர். ஷபாலி 71* ரன் (71 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), மந்தனா 94* ரன்னுடன் (83 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரேணுகா சிங் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 7ல் நடக்க உள்ளது.
மேலும் செய்திகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு: இந்திய மகளிர் ஏ அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது
காமன்வெல்த் விளையாட்டு நிறைவு; இந்தியா 4வது இடம் பிடித்தது
சிந்து, லக்ஷியா, சாத்விக் - சிராஜ் அசத்தல்; பேட்மின்டனில் தங்கமான நாள்
காமன்வெல்த் விளையாட்டு திருவிழா: மகளிர் டி20ல் இந்தியாவுக்கு வெள்ளி
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு அம்சங்கள்
வெற்றி கனியை சுவைக்கும் இந்திய வீரர்கள்!: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன்..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!