SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆகாயத் தாமரையால் தூர்ந்துள்ள புழல் ஏரி: மழைநீர் சேமிப்பதில் சிக்கல்

2022-07-05@ 00:13:43

புழல்: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் ஒன்றான புழல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. தற்போதைய தண்ணீர் இருப்பு 3,048 மில்லியன் கன அடியாக உள்ளது. 307 கனஅடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 214 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் இந்த ஏரியில் அதிகப்படியான தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், இந்த ஏரியில் ஆகாய தாமரைகள் படர்ந்து, தூர்ந்துள்ளதால், மழைக்காலங்களில் போதிய தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளதுடன், குடிநீர் மாசடையும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக புழல் ஏரியில் ஆய்வு செய்து, ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
இதேபோல், சோழவரம் ஏரியின் உபரி நீர் புழல் ஏரியில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாயத் தாமரைகள் வளர்ந்து தூர்ந்துள்ளது. இதையும் அகற்றி, கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்